மாடித்தோட்டம் வீட்டின் மொட்டை மாடியில் அதிக இடவசதி இருக்கும் என்பதால், அதிக செடி, கொடிகள் வளர்க்க முடியும். ஆனால், ‘செடிகளுக்கு ஊத்துற தண்ணி, உள்ள இறங்கி கான்கிரீட் காலாவதியாகிடுமோ’ என்ற கவலை கலந்த அச்சம் பலருக்கும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள் மக்களே.. சில எளிய நுட்பங்கள் மூலமாக, தண்ணீர் உட்புகாமல் தடா போட்டு விடலாம். உதாரணமாக, செங்கல்லை கீழே அடுக்கி அதன் மீது பலகையை வைத்து, பலகையின் மீது தொட்டிகளை வைத்தால் கட்டடத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ‘எதற்கு வம்பு இறங்கிட்டா என்ன செய்றது’ என யோசிப்பவர்கள், ‘ஹை டென்சிட்டி பாலிதின் ஷீட்’ விரித்து அதன் மீது தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். மாடித் தோட்டம் அமைக்கும் முன் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாடியில் தண்ணீர் எந்த வாட்டத்தில் போகிறது என்பதைப் பார்த்து, அதற்கு எதிர் பக்கத்தில் தோட்டம் அமைக்க வேண்டும்.
அப்போதுதான் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல் வழிந்தோடி விடும். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்..இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனச் சொல்வதுபோல தண்ணீர் அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான்.. குறைவாக இருந்தாலும் பிரச்னைதான். சிலருக்கு, ‘‘குடிக்கவே தண்ணி கிடைக்க மாட்டேங்குது..இதுல எங்கிட்டு தோட்டம் போடுறது’’ என்ற ஆதங்கம் இருக்கும். கவலையேபட வேண்டாம். ‘நாங்கள் மினரல் வாட்டர் கொடுத்தால்தான் வளர்வோம்’ என எந்தச் செடி களும் சொல்வதில்லை.. ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்தின் கழிவுநீர் போதும் வீட்டுத் தோட்டம் அமைக்க. சில எளிய வழிமுறைகளை கையாள்வதன் மூலமாக கழிவு நீரைப் பயன்படுத்தியே காய்கறிகளை வளர்க்கலாம்.. அதைப் பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம். மண் தொட்டிதான் சிறந்தது! தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், செங்கல் அடுக்கி அதன் மீது பலகையை வைத்து அதன் மீது தொட்டிகளை வைக்கலாம். புதிதாக கட்டடம் கட்டுபவர்கள், தோட்டம் அமைப்பதற்கு ஏற்ப மாடியில் ‘சிமென்ட் சிலாப்கள்’ அல்லது தொட்டிகளை கட்டிக்கொள்ளலாம். மண்ணில் விவசாயம் செய்யும்போது, செடிகளை நேரடியாக மண்ணில் நடவு செய்வதுபோல மாடியில் நட முடியாது என்பதால், செடி வளர்வதற்கு ஒரு ஊடகம் தேவை. மண் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், பழைய சாக்குகள், பழைய டப்பாக்கள், பக்கெட்கள், பிவிசி பைப்கள் என வீட்டில் வீணாக உள்ள பொருட்களில், எந்தெந்தப் பொருட்களில் செடிகள் வளர்க்க முடியும் என நினைக்கிறீர்களோ அத்தனையிலும் வளர்க்கலாம். பொதுவாக, மண் தொட்டியில் செடிகளைப் பயிரிடுவதே சிறந்தது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறி விடும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கிடையாது. அதனால் அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி, செடிகளின் வளர்ச்சி பாதிக்கும்.

No comments:
Post a Comment