வீட்டு தோட்டம் அமைக்க மண் தயாரிப்பது எப்படி ?
,சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு, ‘மண்ணுக்கு எங்க போறது’ எனத் தோன்றலாம்.. சிறிது மெனங்கெட்டால் போதும் மண் கிடைத்து விடும். சென்னையை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரம் போனால் விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கிருந்து மண்ணை கொண்டு வரலாம். ‘அதெல்லாம் சரியா வராது’ என நினைப்பவர்களுக்கும் இருக்கிறது ஒரு தீர்வு. ‘காயர்பித்’ எனப்படும் தென்னைநார் கழிவுகளை கட்டியாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அந்த கட்டியை வாங்கி, தொட்டியில் வைத்து நீரை ஊற்றினால் பொது பொதுப்பாகிவிடும். அதிலும் செடிகளை நடவு செய்யலாம். காயர்பித் மூலம் தொட்டிகள் தயார்செய்யும் போது, எடை ரொம்ப குறைவு. மண்ணில் வளர்வதைவிட இதில் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இது ஒரு கிலோ, ஐந்து கிலோ என கேக் வடிவில் கிடைக்கி .
கடைகளில் வாங்கும் நாட்டுக் காய்கறிகளில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். தக்காளி, கத்திரி, பாகல், புடல் போன்ற காய்கள் வாங்கும்போது, நன்கு பழுத்த காய்கள் இரண்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாக பழுக்க வைத்து, தோலை நீக்கி விதையை எடுத்து, அடுப்பு சாம்பல் இருந்தால் அதில் கலந்து, பேப்பரில் கொட்டி காயவைக்க வேண்டும். சாம்பல் இல்லாவிட்டால் அப்படியே காய வைக்கலாம். மிளகாய் வற்றலை உடைத்து விதைகளை எடுத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பிறகு, நாற்றாங்காலில் விதைத்து, 15 நாட்கள் கழித்து, செடி சற்று பெரிதாக வளர்ந்ததும் தொட்டிகளில் எடுத்து நடவு செய்யலாம்.
புதினா, கொத்தமல்லி, கீரைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து அதன் வேரை மண்ணில் ஊன்றி வைத்தாலே போதும்.. வளர்ந்து விடும். இதைத்தவிர மற்ற காய்கறி, கீரை விதைகளை உரக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் நாட்டுரக விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. நல்ல சுவையும், மணமும் கொடுப்பதுடன் பூச்சி, நோய் தாக்குதல், வறட்சியைத் தாங்கி வளரும் குணம் நாட்டுரக விதைகளுக்கு இயற்கையிலேயே உண்டு.
நாற்றாங்கால் தனியாக அமைக்க வாய்ப்பில்லாதவர் களுக்காக குழித்தட்டு கிடைக்கிறது. வீடுகளில் இட்லி ஊற்றும் தட்டுபோல குழிகளுடன் இருக்கும் இந்த டிரேயை பயன்படுத்தினால் அதிக இடம் தேவைப்படாது. ஒவ்வொரு குழியிலும் சிறிது தென்னைநார் கழிவைப் போட்டு, தேவையான விதைகளை ஊன்றி, தண்ணீர் தெளித்து வந்தால், நாற்று நன்றாக வேர்ப் பிடித்து வளரும். ஒரு டிரேயில் கிட்டத்தட்ட நூறு நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். இதை எடுத்து நடுவது ரொம்ப சுலபம். பிடித்து இழுத்தாலே போதும், சல்லிவேர்கள் வரை பாதிப்பில்லாமல் வந்துவிடும். நாற்றை பறிக்கும் முன்பாக சிறிது தண்ணீர் தெளித்து பறிக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொட்டை மாடியில் அதிக செடிகளை வளர்க்க நினைப்பவர்கள், நாற்றாங்கால் தயாரிப்பு தனியாக சிறிது இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி). சில நாற்று விட்டு, வளர்ந்தபின் நடவேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்துகொண்டு வருவதும் கடினம்.
பயிர் வளர அடிப்படையாக இருப்பது மண்தான். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மண் கிடைக்கும் என்றாலும் செம்மண் பயிர் வளர ஏற்றது. அது கிடைக்காதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். களிமண்ணை தவிர்ப்பது நல்லது. மண்ணை கொண்டுவந்தவுடன் கீழே கொட்டி, அதில் உள்ள குச்சிகள், கட்டிகள், கல் ஆகியவற்றை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின்பு, காய்ந்த மாட்டு சாணம் அல்லது ஆட்டு சாணம் ஆகியவற்றை தூளாக்கி, மண்ணில் கலந்துகொள்ள வேண்டும். இது கிடைக்காதவர்கள் மண்புழு உரத்தை கலந்துக் கொள்ளலாம். இதில் சிறிது மணல் கலந்து பயன்படுத்தலாம்.i
,சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு, ‘மண்ணுக்கு எங்க போறது’ எனத் தோன்றலாம்.. சிறிது மெனங்கெட்டால் போதும் மண் கிடைத்து விடும். சென்னையை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரம் போனால் விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கிருந்து மண்ணை கொண்டு வரலாம். ‘அதெல்லாம் சரியா வராது’ என நினைப்பவர்களுக்கும் இருக்கிறது ஒரு தீர்வு. ‘காயர்பித்’ எனப்படும் தென்னைநார் கழிவுகளை கட்டியாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அந்த கட்டியை வாங்கி, தொட்டியில் வைத்து நீரை ஊற்றினால் பொது பொதுப்பாகிவிடும். அதிலும் செடிகளை நடவு செய்யலாம். காயர்பித் மூலம் தொட்டிகள் தயார்செய்யும் போது, எடை ரொம்ப குறைவு. மண்ணில் வளர்வதைவிட இதில் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இது ஒரு கிலோ, ஐந்து கிலோ என கேக் வடிவில் கிடைக்கி .
கடைகளில் வாங்கும் நாட்டுக் காய்கறிகளில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். தக்காளி, கத்திரி, பாகல், புடல் போன்ற காய்கள் வாங்கும்போது, நன்கு பழுத்த காய்கள் இரண்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாக பழுக்க வைத்து, தோலை நீக்கி விதையை எடுத்து, அடுப்பு சாம்பல் இருந்தால் அதில் கலந்து, பேப்பரில் கொட்டி காயவைக்க வேண்டும். சாம்பல் இல்லாவிட்டால் அப்படியே காய வைக்கலாம். மிளகாய் வற்றலை உடைத்து விதைகளை எடுத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பிறகு, நாற்றாங்காலில் விதைத்து, 15 நாட்கள் கழித்து, செடி சற்று பெரிதாக வளர்ந்ததும் தொட்டிகளில் எடுத்து நடவு செய்யலாம்.
புதினா, கொத்தமல்லி, கீரைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து அதன் வேரை மண்ணில் ஊன்றி வைத்தாலே போதும்.. வளர்ந்து விடும். இதைத்தவிர மற்ற காய்கறி, கீரை விதைகளை உரக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் நாட்டுரக விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. நல்ல சுவையும், மணமும் கொடுப்பதுடன் பூச்சி, நோய் தாக்குதல், வறட்சியைத் தாங்கி வளரும் குணம் நாட்டுரக விதைகளுக்கு இயற்கையிலேயே உண்டு.
நாற்றாங்கால் தனியாக அமைக்க வாய்ப்பில்லாதவர் களுக்காக குழித்தட்டு கிடைக்கிறது. வீடுகளில் இட்லி ஊற்றும் தட்டுபோல குழிகளுடன் இருக்கும் இந்த டிரேயை பயன்படுத்தினால் அதிக இடம் தேவைப்படாது. ஒவ்வொரு குழியிலும் சிறிது தென்னைநார் கழிவைப் போட்டு, தேவையான விதைகளை ஊன்றி, தண்ணீர் தெளித்து வந்தால், நாற்று நன்றாக வேர்ப் பிடித்து வளரும். ஒரு டிரேயில் கிட்டத்தட்ட நூறு நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். இதை எடுத்து நடுவது ரொம்ப சுலபம். பிடித்து இழுத்தாலே போதும், சல்லிவேர்கள் வரை பாதிப்பில்லாமல் வந்துவிடும். நாற்றை பறிக்கும் முன்பாக சிறிது தண்ணீர் தெளித்து பறிக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொட்டை மாடியில் அதிக செடிகளை வளர்க்க நினைப்பவர்கள், நாற்றாங்கால் தயாரிப்பு தனியாக சிறிது இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி). சில நாற்று விட்டு, வளர்ந்தபின் நடவேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்துகொண்டு வருவதும் கடினம்.
No comments:
Post a Comment