Thursday, June 6, 2019

ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். ‘‘எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத்திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரைr, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.
ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டியிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதையெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச்சுட்டோம்’’ என்றவர் தோட்ட அமைப்பு முறைகளைப் பற்றி விளக்கினார். ‘‘மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப்பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல் கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண் தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச்சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர்தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு... அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்.’’ தரை சேதமாவதில்லை! அருகிலிருந்த சிவக்குமாரின் தாயார் சரஸ்வதி பேச்சின் ஊடே புகுந்தார். ‘‘சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவுநீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்துறோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அதுமேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகறதில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட

ஆயிரம் சதுரடியில் 50 வகையான தாவரங்கள்!

‘‘மாடித் தோட்டத்தின் மூலம் மருத்துவம் மட்டுமல்ல..வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். ‘‘நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்’’ என்று பெருமையோடு சொன்னவர்,

மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு.

பொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவுக்கு மீறி இருந்தா ஆபத்தாகிடும். அதனால, வெளிச்சத்தைப் பாதியா குறைக்கறதுக்காக பசுமைக் குடில் அமைச்சுருக்கேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். காலையிலயும் சாயங்காலமும் தண்ணி ஊத்துவேன். தொட்டியில வழிஞ்சு வர்ற தண்ணி, தொட்டிக்குக் கீழ இருக்கற தட்டுலயே தங்கிடும். அதனால அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோட, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது. கழிவுகள்ல இருந்து எரிவாயு தயாரிக்கற கலனை வீட்டுல அமைச்சுருக்கேன். கழிவுகளை அரைச்சு அதுல ஊத்திட்டா வீட்டுக்குத் தேவையான எரிவாயு கிடைச்சுடுது. ஆரம்பகட்டத்துல ஆகுற செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலன்ல இருந்து வெளியாகுற கழிவு நீர்...நல்ல உரம். இதைத்தான் செடிகளுக்கு ஊட்டத்துக்காகக் கொடுக்கிறேன். அதனால, ஒரு சொட்டு ரசாயனத்தைக்கூட பயன்படுத்தறதில்லை. ஒரு வருஷமா... எங்க வீட்டுல விளையுற காய்களைத்தான் நாங்க சாப்பிடறோம். தேவைக்குப் போக மீதம் உள்ளதை வித்துடறோம்’’ என்பவர்,
‘‘வயசான காலத்துல சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம்னு எல்லாம் கொடுக்கிற இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போறேன்னுதான் தெரியல’’ என்று நெகிழ்கிறார். ரசாயனம் தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வதே இயற்கைக்குச் செய்யும் கைமாறுதானே.!

இயற்கைக்கு நாம் பெரிதாக எந்த கைமாறும் செய்ய வேண்டாம். அதை இம்சிக்காமல் இருந்தாலே போதும். குறைந்த பட்சம் விவசாயத்திலாவது ரசாயன பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நடைபிணங்களாக ஒரு சந்ததியையே மாற்றிய நச்சு அரக்கனை வீட்டுத் தோட்டத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது. ‘‘எல்லாம் சரிதான்.. செடிகள் இருந்தா அதில் உக்கார பூச்சிகள் வரும்.. அது மூலமா நோய்கள் வரும். அதை தடுக்க வேண்டாமா..? ரசாயன பூச்சிக்கொல்லியைத் தெளித்தால்தானே அதை சரிசெய்ய முடியும்.?’’ என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சிகளை விரட்டவும் சில வழிமுறைகளை கைக்கொண்டுள்ளது இயற்கை வேளாண்மை.

மூலிகை பூச்சிவிரட்டி! ஆடு சாப்பிடாத இலை மற்றும் தழைகளை மொத்தமாக ஐந்து கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில், 9 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 16--ம் நாள் இதை பயிர்களுக்குத் தெளித்தால்.. அதுதான், பூச்சிவிரட்டி. அப்படியும் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில், இஞ்சி- 100 கிராம், பூண்டு -100 கிராம், பெருங்காயம் -10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து, அதை ஒரு லிட்டர் நாட்டுமாட்டு சிறுநீரில் கலந்து, 9 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு, இதைத் தினமும் செடிகளின் மீது தெளிக்கலாம்.
உதாரணமாக, அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி...போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கம் பாம்பு தலை வைக்காது. செடிகளுக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இடவேண்டும். காய்ந்த இலைதழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... போன்ற சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.

Wednesday, June 5, 2019

600 சதுரடி .....300 கிலோ! மாடியில் விளையும் பன்னீர் திராட்சை !

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.
 ‘பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்காது’ என்பார்கள். அதுபோலதான் விவசாயமும். கடும்வறட்சி காரணமாக வயலெல்லாம் காடாகி காய்ந்து போய் கிடக்கும் நிலையில்... ‘தன் வீட்டு மொட்டை மாடியையே திராட்சைத் தோட்டமாக்கி விவசாயத்தைத் தொடர்கிறார், ஒரு விவசாயி’ என்ற தகவல், நம்மை வந்தடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா, சித்தூர் பஞ்சாயத்து, புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்தான் அந்த விவசாயி. அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். வேடசந்தூர், எரியோடுசாலையில் பூத்தாம்பட்டி என்ற ஊர் எல்லையில், வடக்குத் திசையில் பிரியும் தார்ச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, புளியம்பட்டி. போகும் வழியில் விவசாயத்தையே பார்க்க முடியவில்லை. கடுமையான வறட்சியில் நிலமெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாததால் துருப்பிடித்துக் கிடக்கின்றன, பம்ப்செட் மோட்டார்கள்.

 மொட்டை மாடி சாகுபடி! மாடியில் திராட்சை சாகுபடி குறித்து, செல்வராஜ் சொன்ன விஷயங்கள் இங்கே... “வீட்டைச் சுற்றி 5 அடி இடைவெளியில் 4 அடி அகலம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு சிமெண்ட் சாக்கு அளவு மணல், ஒரு சிமெண்ட் சாக்கு அளவு குப்பை எருவைக் கொட்டி, செடியை நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழியை மூடவேண்டும். தொடர்ந்து செடியைக் காய விடாமல் தண்ணீர் கொடுத்து வந்தால், செடி தழைத்து வளரும். 2 இலைக்கு அடுத்து ஒரு சிம்பு வெடிக்கும். இதை நகத்தால் கிள்ளி எடுத்துவிட வேண்டும். செடி வளரும் பருவத்தில் சிம்பு கிள்ளி விடுவதில் கவனமாகஇருக்க வேண்டும். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, கயிறு மூலமாகக் கொடியை மாடிக்கு ஏற்ற வேண்டும். கொடியின் முனையில் கயிற்றை நேரடியாகக் கட்டக்கூடாது. பிளாஸ்டிக் கவரை கிழித்து கயிறுபோல் ஆக்கி, அதைக் கொடியின் முனையில் மென்மையாகக் கட்ட வேண்டும். மறுமுனையைக் கயிற்றுடன் இணைக்க வேண்டும். நடவில் இருந்து கொடி, மாடியை அடைய ஆறு மாதங்கள் ஆகும். கொடி மாடியை அடைவதற்குள் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். பந்தலின் உயரம் ஆறு அடி இருக்க வேண்டும். 10 அடி இடைவெளியில் இரும்புக் கம்பிகளைப் பொருத்தி, நடுவில் கட்டுக் கம்பிகளை இழுத்துக் கட்டி பந்தல் அமைக்கலாம். பறவைகள் தாக்குதல் இருந்தால், பந்தலைச் சுற்றிலும் ‘கோழிவலை’ அமைக்கலாம்.
   பந்தலில் கொடியை ஏற்றிய பிறகு பந்தல் முழுக்க இலைகள் வந்ததும், ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்து புது சிம்புகள் வெடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். ஆண்டுக்கொரு முறை கடலைப்பிண்ணாக்கை தண்ணீரில் கரைத்து செடியின் வேரில் இருந்து ஒன்றரை அடி தள்ளி ஊற்ற வேண்டும். காய் பிடிக்கும் நேரத்தில் எறும்பு, உள்ளிட்ட சில பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இதற்குத் தகுந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கலாம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பழங்கள் கிடைக்கும். திராட்சைக்கு வறட்சிதான் பிடிக்கும். மழை அதிகமாக பெய்யும் பகுதியில் சரியாக வளராது.”
சுமார் 100 வீடுகளே இருக்கும் சின்ன கிராமம். கோயிலை ஒட்டிய சிமென்ட் பாதையில் குறுகலான சந்தில் இருக்கிறது, செல்வராஜின் வீடு. வீட்டுவாசலில் இருக்கும் மல்லிகைச் செடியைக் கவாத்து செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்து, திராட்சைத் தோட்டம் பற்றிக் கேட்டதும் ஆர்வமானவர், மாடிக்கு அழைத்துச் சென்றார். மொட்டை மாடியில் வெயிலே தெரியாத வகையில் பசுமைப் போர்வை போர்த்தி இருந்தது, பன்னீர் திராட்சைப் பந்தல். உள்ளே கொத்துக்கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன திராட்சைப் பழங்கள். திராட்சைத் தோட்டத்துக்குள் நுழைந்த பிரமிப்பில் இருந்த நம்மிடம் ஒரு கொத்தை நீட்டி, ‘‘சாப்பிட்டுப் பாருங்க” எனக் கொடுத்துவிட்டு, பேசத் தொடங்கினார், செல்வராஜ்.

“பஞ்சகவ்யா இருக்க பூச்சிக்கொல்லி எதற்கு?” பூச்சிகளுக்கு இயற்கைத் தீர்வு குறித்து, திண்டுக்கல் மாவட்ட, திராட்சை சாகுபடி முன்னோடி இயற்கை விவசாயி ஜானகிராமனிடம் கேட்டோம்... “கவாத்து செய்து முடித்தவுடன், 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்தாலே போதும். எந்தப் பூச்சியும், எந்த நோயும் தாக்குவதில்லை. கடலைப்பிண்ணாக்கு விலை அதிகம் என்பதால், கடலைப்பிண்ணாக்கு 50%, புங்கன் பிண்ணாக்கு 20%, ஆமணக்குப் பிண்ணாக்கு 20%, வேப்பம் பிண்ணாக்கு 10% கலந்து ஊற்றலாம். மாடித்தோட்டத்துக்கு இதைப் பின்பற்றினாலே போதும். இயற்கை முறையில் நன்றாக திராட்சையை விளைய வைக்கலாம்” என்றார்.

ஏமாற்றிய மழை! ‘‘எங்களுக்குப் பரம்பரையா விவசாயம்தான் தொழில். அப்பா காலத்துல நல்லபடியாத்தான் சம்சாரித்தனம் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு காலத்துல முருங்கை, நெல்லு, கடலைனு பெருங்கொண்ட விவசாயம் நடந்துகிட்டிருந்த ஊருதான். இடையில, மழைத் தண்ணியில்லாம கெணறுக வத்திப்போச்சு. எங்க ஊர்ல நல்லா மழை பேஞ்சி ஏழெட்டு வருஷமாச்சு. காசு பணம் இருக்கிறவங்க போர் போட்டு வெள்ளாமை பண்ணுனாங்க. என்ன மாதிரி இல்லாதவங்க, கெணத்தை அப்படியே போட்டுட்டு கூலி வேலைக்குக் கிளம்பிட்டோம். உழவு ஓட்டுறது, பிளம்பிங், கொத்தனார், கம்பி கட்டுறதுனு கிடைக்கிற வேலைக்குப் போயி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு மரம் வளர்க்கிறதுல ரொம்ப ஆர்வம். வீட்டைச் சுத்தி மாதுளை, மல்லிகைனு நட்டு வளர்த்துக்கிட்டு இருந்தேன். எங்கயாவது வெளியூருக்குப் போனா, அங்க இருந்து ஏதாவது கன்னை வாங்கிட்டு வந்து நட்டு வளர்ப்பேன். ஆறு வருஷத்துக்கு முன்னகூட கேரளாவுக்கு கூலி வேலைக்குப் போயிட்டு வரும்போது, கொஞ்சம் கன்னுகளை வாங்கிட்டு வந்து ஊர் எல்லையில இருக்கிற கோவில் பக்கத்துல நட்டு வெச்சிருக்கேன். ஆல், அரசு, புங்கன் மாதிரியான மரங்களோட நாத்துகளை வாங்கிட்டு கொஞ்சம் பெருசா வளர்த்து, கோவில்களுக்கு இலவசமா கொடுத்துடுவேன்.
கற்றுக்கொடுத்த விவசாயிகள்! என் வீட்டம்மா, வேலைக்குப் போற வீட்ல ரெண்டு திராட்சைக் கொடிகள் நட்டு வெச்சிருந்ததைப் பாத்துட்டு வந்து சொன்னாங்க. உடனே, எனக்கும் திராட்சை நடணும்னு ஆர்வமாகிடுச்சு. அந்த வீட்டுல போய் பார்த்தேன். அப்பறம் திண்டுக்கல் மாவட்டத்துல, திராட்சை அதிகமா விளையுற சின்னாளபட்டி பக்கத்துல இருக்கிற ஊத்துப்பட்டியில போயி சில விவசாயிங்களோட தோட்டங்களைப் பாத்தேன். திராட்சை நடவு, பராமரிப்பு, கவாத்துனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. சாகுபடி முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அவங்ககிட்டயே முப்பது குச்சி வாங்கிட்டு வந்து பிளாஸ்டிக் பையில வெச்சு வளர்த்து நடவு போட்டேன்” என்ற செல்வராஜ், இவற்றை வளர்த்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்திருக்கிறார்.

  1. 10 செடிகளில் படர்ந்த பந்தல்! “வீட்டைச் சுத்தி ரெண்டடி தான் இடமிருக்கு. மாடியில திராட்சைப் பந்தல் போட்டுக்கலாம். ஆனா, மாடியில செடியை நட முடியாது. தொட்டிகள்ல வெச்சாலும் வேர் பெருசானா தொட்டி தாங்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வீட்டைச் சுத்தி செடியை நட்டு, கயிறு மூலமா மாடிக்குக் கொடியை ஏத்தி, பந்தல்ல படரவிட்டேன். பந்தல் அமைக்கிறதுக்கு பழைய இரும்புக் குழாய்களைப் பயன்படுத்தியிருக்கேன். இதுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாச்சு.

ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இப்ப கொத்துக்கொத்தா பழங்களைப் பாக்கும்போது, அந்த கஷ்டமெல்லாம் காணாமப் போயிடுச்சு. இதை நட்டு ரெண்டு வருஷமாச்சு. இப்ப என்கிட்ட 10 செடிகள் இருக்கு. அதுகளோட கொடிதான் மாடியில படர்ந்திருக்கு. வருஷத்துக்கு ஒரு தடவை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை வாங்கி, தண்ணியில கரைச்சு, செடியோட வேர்கிட்ட ஊத்துவேன். காய் பிடிக்குற நேரத்துல ஒரு பூச்சி வரும். அதுக்கு மட்டும் கடையில பூச்சிக்கொல்லி வாங்கித் தெளிப்பேன். இதுபோக வேற எதையும் கொடுக்குறதில்ல.
300 கிலோ மகசூல்! இதுவரைக்கும் மூணு தடவை பழம் வெட்டியிருக்கோம். 800 சதுர அடியில மாடி இருக்கு. அதுல 600 சதுர அடியில பந்தல் இருக்கு. முதல் தடவை 70 கிலோ கிடைச்சது. அடுத்த தடவை 130 கிலோ. இந்தத் தடவை இதுவரைக்கும் 150 கிலோவுக்கும் மேல எடுத்திட்டோம். இன்னும் 150 கிலோ கிடைக்கும்னு நினைக்கிறேன். செலவுனு பாத்தா வருஷத்துக்கு 1,500 ரூபாய் ஆகும். இந்தப் பழங்களை விலைக்குக் கொடுக்கறதில்லை. வீட்டுத்தேவை போக, சொந்தக்காரங்களுக்கும், ஊர்ல இருக்கிற சின்னப் பசங்களுக்கும் இலவசமா கொடுத்திடுவேன். அதுபோக, அணில், காக்கா வந்து தின்னுட்டுப் போகும். அதை நான் தடுக்கறது இல்லை. அதுக தின்ன மீதிதான் நமக்கு” என்ற செல்வராஜ்,

“மொதல்ல, வெவசாயம் பாக்காம, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். இந்தத் தோட்டம் போட்ட பின்னாடி, அந்த நினைப்பு இல்லை. காலையில, சாயந்திரம்னு எப்ப ஓய்வு கிடைச்சாலும் மாடிக்கு வந்திடுவேன். இதையும் தோட்டமா நினைச்சுத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னபோது, அவருடைய மனதில் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது!

உணவுக்கு காய்கறி ....மருந்துக்கு மூலிகைகள்

வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் மட்டுமல்லாமல் மூலிகை செடிகளையும் வளர்ப்பதன் மூலமாக மருத்துவ செலவையும் கணிசமாக குறைக்கலாம். மாடித் தோட்டத்தில் காய்கறிகளையும், மூலிகைகளையும் வளர்த்துவரும் ஆட்ரிஜோவின் குடும்பத்தினரின் அனுபவத்தைக் கொஞ்சம் கேளுங்களேன். பல்பொருள் அங்காடிகளில்...பளீர் விளக்குகளின் வெளிச்சத்தில்... பளபளக்கும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு மொத்தமாக வாங்கி, குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளுக்குப் பழக்கம். ஏன், கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் இப்போது மெள்ளத் தொற்றி வருகிறது. இத்தகையோருக்கு மத்தியில், பரபரப்பான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வெட்டூர்ணிமடத்தில் உள்ளதங்கள் வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, தினமும் புத்தம்புதிய காய்கறிகளைப் பயிரிட்டு ஆரோக்கியத்தை அறுவடை செய்து வருகிறார்கள் இவர்கள்.
‘‘19 வருஷத்துக்கு முன்ன அமைச்சது, இந்த மாடித்தோட்டம். நான் கோயம்புத்தூர்ல, பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியரா இருக்கறதால...இதுல அதிகம் ஈடுபாடு காட்ட முடியல. லீவு கிடைச்சா போதும்...தோட்டத்தைப் பார்க்கறதுக்காக கிளம்பி வந்துடுவேன். அப்பாவும் அம்மாவும்தான் முழுக்க இந்த மாடித்தோட்டத்தைப் பாத்துக்கறாங்க’’ என்று உற்சாகமாகச் சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைத்தது பற்றிய அனுபவத்தை, தொழில்நுட்பத் தகவல்களோடு கலந்து சொல்ல ஆரம்பித்தார்.

             ‘‘19 வருஷத்துக்கு முன்ன அமைச்சது, இந்த மாடித்தோட்டம். நான் கோயம்புத்தூர்ல, பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியரா இருக்கறதால...இதுல அதிகம் ஈடுபாடு காட்ட முடியல. லீவு கிடைச்சா போதும்...தோட்டத்தைப் பார்க்கறதுக்காக கிளம்பி வந்துடுவேன். அப்பாவும் அம்மாவும்தான் முழுக்க இந்த மாடித்தோட்டத்தைப் பாத்துக்கறாங்க’’ என்று உற்சாகமாகச் சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைத்தது பற்றிய அனுபவத்தை, தொழில்நுட்பத் தகவல்களோடு கலந்து சொல்ல ஆரம்பித்தார் .

கழிவுப் பொருட்களில் காய்கறிச்செடிகள்! 

                        ‘‘எங்க வீட்டு மாடி, 600 சதுர அடி. இதுல சில மூலிகை உட்பட இருபதுக்கும் மேலான செடி வகைகள் இருக்கு. வீட்டுத் தேவைக்காக வெளியில் இருந்து விலை கொடுத்து காய்கறி வாங்கறதை நிறுத்தி, 15 வருசம் ஆச்சு. மாடித்தோட்டம் அமைக்கறப்போ தண்ணி இறங்கி, கட்டடம் சேதமாகாம இருக்கறதுக்காக... தொட்டிகளுக்கு அடியில, ரெண்டு அடுக்கா செங்கல் வைக்கணும். மண்தொட்டிதான்னு இல்லாம, மண் கொட்டி வைக்க முடியுற எதுல வேணாலும், செடிகளை வளக்கலாம். நாங்க எண்ணெய் கேன்களைக் கூட ரெண்டா வெட்டி செடி வெச்சுடுவோம். அப்பா ஃபிரிட்ஜ் மெக்கானிக். அதனால, அவர் கழட்டிப் போடுற உதிரி பாகங்கள்லகூட செடி வளர்க்கிறோம். தொட்டி, பாத்திரம், வாளினு செடி வைக்கறதுக்காக எதைத் தேர்ந்தெடுத்தாலும்... அதுல நாலு கதம்பையை (தேங்காய்மட்டை) வெச்சு, 5 கிலோ மண், ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கையளவு செங்கல்பொடி போட்டு, செடிகளை நட்டுடுவோம். சமையலறைக் கழிவுகள், கழிவு நீர் எல்லாம் எங்க வீட்டுப் புழக்கடையிலதான் சேருது. அங்க இருந்து மண் எடுத்துதான் செடி வளர்க்கிறோம். இப்படி சத்தான மண் கிடைச்சுடறதால... செடிகள் நல்லா வளருது.

       இதயத் துடிப்பை சீராக்கும் செம்பருத்தி! 

‘‘செம்பருத்தி இலைகளை தினமும் சாப்பிட்டா... இதயத்துடிப்பு சீராகிடும். செம்பருத்தியையும், மருதாணியையும் சேர்த்து அரைச்சு தலையில் தடவினா, இளநரை கட்டுப்படும். கீழ்க்காய் நெல்லி... மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. சோற்றுக் கற்றாழைக்குள்ள இருக்குற ‘ஜெல்’லை தினமும் ரெண்டு துண்டு சாப்பிட்டா தோல் சம்பந்தமான நோய்களும், உணவுக்குழாய் பிரச்னைகளும் வரவே வராது.

செடிகளுக்கு உரமாகும் கழிவுகள்!

            வீட்டுல நிறைய கலர் மீன்கள் வளர்க்கிறோம். மீன் தொட்டியில 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் மாத்தணும். அந்தத் தண்ணியையும் வீணாக்காம செடிகளுக்கு ஊத்திடுவோம். அதுல மீன்கழிவுகள் கலந்து இருக்கறதால...அது நல்ல திரவ உரமா ஆயிடுது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர் முயல் வளக்குறார். அவர் வீட்டுல இருந்து முயல் கழிவுகளை எடுத்துட்டு வந்து... இருபது லிட்டர் தண்ணீருக்கு, ஒரு கிலோ முயல் கழிவுனு ஒரு கேன்ல கலந்து வெயில்ல வெச்சுடுவோம். 15 நாட்கள்ல அதுல நல்லா பாசி பிடிச்சுடும். அதை அப்படியே செடிகள்ல ஊத்திடுவோம். அதனால, பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து அதிகமாகிடைக்கிற பொருட்களை மட்டும்தான் ஊட்டத்துக்காகப் பயன்படுத்துறோம். மத்தபடி, தினமும் காலையில... சாயங்காலம் தண்ணீர் ஊத்துறதோட சரி. எங்க தோட்டத்தில பீன்ஸ், கோழிஅவரை, மிளகாய், சுண்டைக்காய், வெண்டை, பாகற்காய், சிவப்புக்கீரை, வழுதலங்காய், பிரண்டை, கோவைக்காய்னு நிறைய காய்கறிகள் இருக்குது. மாடியில, விளைஞ்சுருக்குற காய்களை வெச்சுதான் நாங்க சமையலை நிர்ணயிப்போம். அதேமாதிரி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, துளசி, செம்பருத்தி, மருதாணி, கீழாநெல்லினு மூலிகைகளும் நிறைய நிக்குது.

பயிர்களைக் காக்கும் சிலந்தி- ஓணான்! 

முழுக்க இயற்கை முறைனாலும், அப்பப்போ பூச்சிகளும் எட்டிப் பாக்கும். அதுக்காக ரசாயன மருந்தெல்லாம் அடிக்க வேண்டியதில்லை. செடிகள்ல வலைகட்டுற சிலந்தியை மட்டும் கலைக்காமல் விட்டுட்டாலே போதும்... பூச்சிகளை அது பாத்துக்கும். அதேமாதிரி செடிகளைத் தேடி வர்ற ஓணான்களையும் நாங்க விரட்டறதில்லை. அதுகளும் பூச்சி, புழுக்களைப் பிடிச்சு சாப்பிட்டுடும்.. அதனால பூச்சி பிரச்னை இருக்கறதில்லை. இந்த மாதிரி சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கடைப்பிடிச்சாலே... நல்ல முறையில காய்கறிகளை உற்பத்தி பண்ணி சாப்பிட்டு, ஆரோக்கியமா வாழமுடியும்’’ என்று சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைக்கும் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கான தீர்வு ஒன்றையும் சொன்னார்.

வாடாமல் காக்கும் கதம்பை!
 ‘‘நாலு நாள் வெளியூர் போனா... செடிகள் வாடிப் போயிடுமேனுதான் நிறைய பேர் மாடித் தோட்டம் போடத் தயங்குறாங்க. ஆனா, அதுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. அந்தத் கவலையை... கதம்பை (தேங்காய் மட்டை) பார்த்துக்கும். ஆமாம்... ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீரை அது எப்பவும் கிரகிச்சு வைச்சுக்கிடும். அதனால கவலையேயில்லை’’ என்றார்.

ஆரோகியத்தை உறுதிப்படுத்தும் மொட்டை மாடி காய்கறிகள் !

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில் இருக்கிறது, ஷிஜியின் வீடு. மலையாளம் கலந்த தமிழில் உற்சாகமாகவே பேசுகிறார் ஷிஜி.

                                 ‘‘என் கணவர் அணில்குமார், பில்டிங் கான்ட்ராக்டர். நான் வீட்டுலயே டெய்லரிங் ஷாப் வெச்சுருக்கேன். எங்களுக்கு விவசாய நிலம் இல்லை. முன்னாடி, சந்தையில்தான் காய்கறிகளை வாங்கிட்டிருந்தோம். என் கணவர், ‘இந்த காய்கறிங்க ரசாயன உரத்துல விளைஞ்சது. உடலுக்குக் கேடுதான் வரும்’னு அடிக்கடி ஆதங்கப்படுவார். அதனாலதான், ‘நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்தா என்னா?’னு தோணுச்சு. அதுக்கப்பறம்தான் மொட்டை மாடியில தோட்டம் போட்டேன். அஞ்சு வருஷமா இந்தத் தோட்டம்தான் எங்களுக்கு காய்கறிகளைக் கொடுத்துட்டிருக்கு’’ என்று பெருமையோடு சொன்னவர், மொட்டைமாடி விவசாய அனு  பவங்களை  எடுத்து வைத்தார்.

காய்கறி முதல் கீரை வரை!
                    ‘‘எங்க மாடியோட பரப்பளவு 900 சதுரடி. முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பயறு வகைகள், முள்ளங்கி, மல்லி, கத்திரிக்காய், வழுதலங்காய், சின்னவெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள்னு எல்லாமே இங்க விளையுது. மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் போட்டா, தண்ணி இறங்கி கட்டடத்துக்கு பாதிப்பு வந்துடும்னு நிறைய பேர் சொன்னாங்க. அதனால, நான்கடி இடைவெளியில் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதுக்கு மேல பலகைகளை வெச்சு அது மேலதான் தொட்டியில் செடிகளை வச்சுருக்கேன். கல்லுக்குப் பதிலா கொட்டாங்குச்சிகளை வரிசையா அடுக்கி வெச்சும் பலகைகளைப் போட்டுருக்கேன்.

மண்தான்  பிரதானம் !

 வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணை அள்ளிட்டு வந்து போடக்கூடாது. நான் செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து தொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு. எங்க ஊரு சந்தையில் இருக்குற கடையிலேயே விதைகள் கிடைக்குது.
    ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு விதம்! 
ஒவ்வொரு விதையையும் விதைக்கறதுக்கு சில வழிமுறைகள் இருக்கு. வெண்டை விதையை வெள்ளைத் துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணியில ஊற வெச்சு எடுத்து, அப்படியே மூணு நாள் வெச்சுட்டா முளை விட்டுடும். அதைத்தான் தொட்டியில விதைக்கணும். காலை நேரத்துலதான் கீரை விதைகளை விதைக்கணும். முட்டைக்கோஸ் பயிர்ல வாழை மாதிரியே பக்கக் கன்னு வரும். மூணு மாசத்துல முட்டைக்கோஸ் அறுவடை முடிஞ்சதும், அதே இடத்துல பக்கக் கன்னை வளர விடாம வேற இடத்துல புது மண் மாத்தி நடவு செய்யணும். அப்பத்தான் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டா போதும்... மாடித் தோட்டத்துல மகசூலை அள்ளிடலாம்’’ என்ற ஷிஜி பராமரிப்பு முறைகள் பற்றியும் பகிர்ந்தார்.

வாரம் ஒரு முறை தொழுவுரம்! 
               ‘‘பக்கத்து வீட்டுல மாடு வளக்குறாங்க. அவங்ககிட்ட தொழுவுரம் வாங்கி, ஒவ்வொரு தொட்டிக்கும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு கையளவு தொழுவுரம் போடுவேன். வீட்டுல அடிக்கடி மீன் சாப்பிடுவோம். அதனால, தலை, வால்னு மீன்கழிவுகள் தாராளமாகக் கிடைக்கும். அந்தக் கழிவுகளையும் ஒவ்வொரு தொட்டியிலயும் கையளவு போட்டு மூடி வெச்சுடுவேன். அதே மாதிரி முட்டை ஓடுகளையும் போடுவேன். அதனால காய்கறிச் செடிகள் வஞ்சனையில்லாமக் காய்க்குது’’ என்ற ஷிஜி நிறைவாக, ‘‘எங்க வீட்டுக்குக் காய்கறிகளை விலைகொடுத்து வாங்கி வருஷக் கணக்காகுது. தினமும் சாயங்காலம் மாடியில ஒரு சுத்து வந்து செடிகளைப் பாத்தா... அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும். இயற்கை முறையில விளையறதால உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்துல எங்க உடம்பையும் மனசையும் இந்த மாடித் தோட்டம்தான் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டிருக்கு’’

‘தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள்.. அதுபோல நீங்கள் நேரடியாக தோட்டம் அமைக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் கற்றுக் கொடுப்பதை யாராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. தொடக்கத்தில் நடவுசெய்த விதைகள் சில முளைக்காமல் போகலாம். அதற்குக் காரணம் தரமில்லாத, முளைப்புத்திறன் குறைந்த விதையாக இருக்கலாம்.. முறையற்ற பாசனமாக இருக்கலாம்.. ஊட்டம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி எத்தனையோ பிரச்னைகள் காரணமாக முளைப்பதில் தாமதமாகலாம் அல்லது முளைக்காமலே கூடப் போகலாம். ஆனால், அதற்காக துவண்டுவிடக்கூடாது. வெடிகுண்டுக்கு பிளக்காத கடும் பாறைகளில் கூட, தனது வாழ்தலுக்காக வேரை இறக்கும் வல்லமை படைத்தவை தாவரங்கள். அப்படியிருக்க அது வாழ்வதற்கு தேவையான அத்தனை வசதியையும் நாம் செய்து கொடுத்திருக்கும்போது எப்படி முளைக்காமல் போகும். பிரச்னை எங்கே இருக்கிறது என்பதை ஆராய்ந்து சரிசெய்தால் போதும் செடிகள் காய்த்து தள்ளி விடும் .

                      கம்ப்யூட்டர் மூலம் தோட்டக்கலை! கம்ப்யூட்டர் வரைபடம் மூலம் அழகுத்தோட்டம் அமைக்கும் கலை அண்மைக் காலத்தில் பிரபலமடைந்து வருகிறது. இதன் சிறப்பம்சம் எந்த இடத்தில் என்ன வகை செடி இருந்தால் அழகாக இருக்கும் என்பதை முன் கூட்டியே கம்ப்யூட்டர் வரைபடம் மூலம் பார்க்க முடியும். நமது ரசனைக்கு ஏற்றபடி செடிகளை மாற்றி வைத்து பார்க்கலாம். இதனால் கால விரயமும், பணமும் மிச்சமாகும். கோவையிலிருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு விருந்தினர் இல்லங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி அழகுத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன.

              தனியார் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் வரைபடம் வரைய பயிற்சி அளித்து வருகின்றன. கம்ப்யூட்டர் ஆட்டோ டிசைனிங், ஆர்க்கிடெக்ச்சர், 3-டி மேக்ஸ் என பலவகையான அழகுத் தோட்ட வரைபடக்கலை பயிற்சிகள் உள்ளன. ஓரளவு கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவும், செடி-கொடிகளைப் பற்றிய விவரங்களும், ஆர்வமும் இருந்தால் இந்தத் துறையில் நிபுணராகவும் வரமுடியும். இந்தத் துறையில் படித்து முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன.

Tuesday, June 4, 2019

6

விதைகளை எவ்வளவு ஆழத்தில் இடவேண்டும்? எவ்வளவு நாளில் முளைக்கும்? பொதுவாய் இவ்வளவு ஆழத்தில் நடவேண்டும் என்று கணக்கு எல்லாம் போட வேண்டியதில்லை. அவரை, வெண்டை போன்று கொஞ்சம் பெரிய விதைகளை ஒன்றில் இருந்து ஒன்றரை இஞ்ச் ஆழத்தில் இடலாம். கத்திரி, தக்காளி, கீரை போன்ற சிறிய விதைகளை, அரை இன்ச் கிளறி விட்டு தூவி விட்டு மூடி விட்டால் போதும். பெரிய கிழங்கு வகைகளை.

. இன்னும் ஆழத்தில் நடவேண்டும் (3 - 4 இன்ச்). விதை முளைக்கும்போது மண்ணை விட்டு வெளியே வரும் அளவுக்கு ஒரு மனக்கணக்கு வைத்து விதைக்க வேண்டியதுதான்.
கீரை மாதிரி செடிகள் விதைத்து இரண்டு- மூன்று நாளிலேயே முளைத்துவிடும். மற்ற காய்கறி விதைகள் ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை ஆகும். நாம் இந்த நாட்களை பெரிதாய் அலட்டிக்கொள்ள தேவை இல்லை. ஒரு பத்து நாட்களுக்குமேல் எடுத்துக் கொண்டால், விதையில் ஏதோ பிரச்னை
என்று நினைத்துக் கொள்ளலாம். கிழங்கு வகைகள் இரண்டு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை கூட எடுக்கும்.

எத்தனை நாளுக்கு ஒரு முறை நீர் விடுவது?

 இது நாம் செடிகளை எதில் வளர்க்கிறோம் என்பதை பொறுத்தது. வெறும் தரையி. .ல் வளர்க்கும்போது நன்றாக வளர்ந்த செடிகளுக்கு மூன்று-நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டால் போதும். காயர்பித் மீடியா என்று போகும்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விட வேண்டியது வரும் .

                முதலில் நாற்று எடுத்து நட்ட பிறகு, செடி ஓரளவுக்கு பெரிதாக வரும்வரை தினமும் நீர்விட வேண்டும். சின்ன செடிகளில் வேர் ஆழமாய் போய் இருக்காது. அதனால் தினமும் நீர் விட வேண்டி வரும். பைகளில் வைக்கும் ரொம்ப சிறிய செடிகளுக்கு (கீரை, தக்காளி மாதிரி) ஒரு சின்ன கப்பில் நீர் எடுத்து உள்ளங்கையில் கொஞ்சமாய் எடுத்து செடிகளுக்கு விடலாம். பூ வாளியில் அப்படியே தெளித்துவிட்டால் நிறைய செடிகள் வேரோடு சரிந்து போய் விடும்.

                   செடி பெரிதாய் வளர்ந்த பிறகு தினமும் நீர் விடுவது நல்லதில்லை. அப்படி விடும் போது செடியின் வேர் நிலத்தின் மேலேயே பரவி விடும். ஆழமாய் போகாது. அதனால் தேவையான சத்துக்களைப் பெற முடியாமல் போகலாம். வேர் எவ்வளவு ஆழமாய் போகிறதோ செடி அவ்வளவு ஆரோக்கியமாய் வரும். நீர்விடும்போது இலைகளில் படாமல், அடிப்பகுதியை சுற்றி விடுவது நல்லது. இலைகளில் தெளிக்கும்போது அந்த ஈரத்தால் பூஞ்சை போன்று சில பிரச்னைகள் செடிகளுக்கு வரலாம்.    .              .     
  அதிகாலையில் நீர் விடுவது நல்லது. நல்ல வெயில் வந்து நிலம் சூடான பிறகு நீர் விடுவதை தவிர்க்க வேண்டும். மாலையில் நீர் விடுவதும் நல்லதில்லை என்றே சொல்கிறார்கள். மாலையில் நீர் விடும்போது மேல் ஈரம் அப்படியே காயாமல் இருப்பதால் சில பூஞ்சை சார்ந்த நோய் தாக்குதல் வரலாம் என்கிறார்கள்.

ஒரு செடியை நல்ல ஆரோக்கியமாய் வளர்க்க என்ன செய்ய வேண்டும்? 

          ஒரு செடியின் ஆரோக்கியம் நிறைய காரணிகளை சார்ந்து உள்ளது. முதலில் நல்ல விதையாய் இருக்கவேண்டும். ரொம்ப நாளைக்கு விதைகளை வைத்து பயன்படுத்த வேண்டாம். ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் தூர போட்டுவிட்டு புதிதாய் வாங்கி பயன்படுத்தவும். அடுத்தது, மிக முக்கியமாய் செடிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது என்பது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நல்ல (நிழல் இல்லாமல்) சூரிய வெளிச்சம் வேண்டும். அதற்கு மேல் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு ஆரோக்கியமாய் செடி இருக்கும். சூரிய வெளிச்சம் குறைவாகக் கிடைக்கும் இடத்தில் வைத்து நாம் என்னதான் உரத்தை அள்ளி போட்டாலும் பயனில்லை.

  • மூன்றாவது, நிலத்தின் தன்மை மற்றும் சத்துக்கள். செடிகளுக்கு, நீருக்கு (ஹைட்ரஜன், ஆக்சிஜன்) அடுத்தபடியாக முதன்மை சத்துக்கள் என்றால் என்.பி.கே (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்). இதைத்தான் தழைச்சத்து (ழி), மணிச்சத்து (றி), சாம்பல்சத்து (ரி) என்கிறார்கள். இதை தவிர கால்சியம், மக்னீசியம், சல்பர் ஓரளவுக்கு செடிக்கு வேண்டும். இன்னும் சில தனிமங்களும் (ஙிஷீக்ஷீஷீஸீ (ஙி), சிஷீஜீஜீமீக்ஷீ (சிu), மிக்ஷீஷீஸீ (திமீ), சிலீறீஷீக்ஷீவீபீமீ (சிறீ), விணீஸீரீணீஸீமீsமீ (விஸீ), விஷீறீஹ்தீபீமீஸீuனீ (விஷீ) ணீஸீபீ ஞீவீஸீநீ (ஞீஸீ) குறைந்த அளவில் தேவைப்படுகிறது. இதில் ஏதாவது தேவையான அளவுக்குக் குறைவாகக் கிடைக்கும்போது, செடிகள் அதற்கான அறிகுறிகளை காட்டும் (இலைகள் வெளிறி போவது, பூ உதிர்வது, பிஞ்சி பிடிக்காமல் போவது மாதிரி.

                       நாற்று விடும்போதே நல்ல சத்துள்ள மீடியாவாக வைத்துக் கொள்வது நல்லது. முதலில் சரியாய் வராத செடி (நிறம் வெளிறி போன, வளர்ச்சி குன்றிபோன செடி) நாம் மறுபடி உரம் போட்டால் உடனே நல்ல நிலைக்கு வருவது கடினம். கொஞ்சம் காலம் எடுக்கும்.
                       நல்ல செம்மண்ணில் தேவையான சத்துக்கள் செடிக்கு எளிதாக கிடைக்கும். ஆனால் சிறிது காலம் கழித்து அவை தீர்ந்தபிறகு உரம் இடுவது அவசியம் ஆகிறது. இந்த தனிமங்களை தனிதனியாக வாங்கி போட முடியாது. அதற்கு பதிலாக மண்புழு உரம், சாணம் சார்ந்த உரத்தைதான் நம்பி இருக்கிறோம். அதைத் தவிர காய்கறி கழிவை மக்க வைத்து உரமாக்கி போடலாம். இலை சருகுகளை மக்க வைத்து போடலாம். மொத்தத்தில் நிலத்தில் மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் செழிப்பாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும்.
            ‘காயர்பித்’ (தென்னை நார் கட்டி) போடும்போது கண்டிப்பாக நிறைய மண்புழு உரம் தேவை. தவிர கொஞ்சம் செம்மண் கலப்பதும் அவசியம். அப்போதுதான் அத்தனை தனிமங்களும் கிடைக்கும். வெறும் காயர்பித் என்பது வெறும் மக்குதான். அதில் ஒன்றுமே கிடையாது. நாற்று எடுக்கக் கூட வெறுமனே அதை மட்டும் பயன்படுத்த வேண்டாம். செடி முளைக்கும். ஆனால் அதற்கு ஒரு சத்துகூட கிடைக்காது. செ....டி முளைத்த உடனேயே குன்றிப்போய்விடும்.. .
.எந்த எந்த காலங்களில் எந்தக் காய்கறி பயிரிட வேண்டும்?

                       ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு பருவம் சொல்கிறார்கள். அந்த காலங்களில் அவைகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆனால் வீட்டுத் தோட்டம் என்று போகும்போது நமக்கு வருடம் முழுவதுமே விளைச்சல் தேவை. ஆங்கில காய்கறிகளை மட்டும் (முட்டை கோஸ், காலிஃப்ளவர் மாதிரி) ஜூன் -- ஜூலை-யில் விதைத்து நவம்பர்- - டிசம்பரில் அறுவடை செய்வதுபோல பார்த்துக் கொள்ளலாம். அவைகள் இங்கே கோடை வெயிலுக்கு எல்லாம் வராது. மற்றபடி நாம் பொதுவாய் ஜூன்--ஜூலையில் ஒரு பருவமும், ஜனவரி-யில் இன்னொரு பருவமும் ஆரம்பிக்கலாம். இடையில் தேவைக்கேற்ற படி நடவு செய்யலாம். பருவத்திற்கு ஏற்றபடி சிலநேரம் காய்கறிகளின் விளைச்சல் மாறுபடலாம். அதனால் ஒன்றும் பெரிதாய் யோசிக்கத் தேவையில்லை’’

5

      மாடித் தோட்டத்தைப் பொருத்தவரை அனுபவம்தான் உங்களை முழுமையான விவசாயியாக மாற்றும். அந்த அனுபவங்களை, ஏற்கனவே மாடித் தோட்டம் அமைத்து வெற்றிகரமாக மகசூல் எடுத்துவரும் சிலர் உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறார்கள். சமீப நாட்களாக மாடித் தோட்டம் குறித்த பயிற்சிகளும், செய்திகளும் ஊடகங்களில் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

                   இந்நிலையில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியைச் சேர்ந்த சிவராஜா, வீட்டுத் தோட்டத்தில் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை தனது வலைப்பூவில் பதிவிட்டு வருகிறார். பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வலைப்பூ பக்கத்தைப் பற்றி பேசும் சிவராஜா, ‘‘நான் ஒரு மென்பொருள் பொறியாளர். நான் வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் இருந்துகிட்டே இருக்கும். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும்போது இடம் இல்லாததால அது முடியலை. பிறகு, கோயமுத்தூருக்கு வந்த பிறகு, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கற மாதிரி வீடா தேடி பிடிச்சு வாங்கினேன். நல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைன்னு ரகத்துக்கு ஒன்னா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் அமைக்கறதுக்கு முன்ன, அது தொடர்பா சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

என் வீட்டுத் தோட்டத்தில் வெங்காயம்

                  ‘‘சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு கூகுளில் தேடிப் பார்த்தபோது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தன.

                 சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது.

                                அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். மண்ணை லேசாக கிளறி விட்டு விதையைத் தூற்றி விட்டேன். ஒரு வாரத்தில் முளைத்துவிட்டது. புல் மாதிரிதான் வளர்ந்து கிடந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது.
 
                                 செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும்போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவுசெய்யலாம்.

 காலிஃபிளவர்..!
                      காலிஃபிளவர், வெஜ் மக்களுக்கு காய்கறியில் ஒரு சிக்கன் மாதிரிதான். தந்தூரி காலிஃபிளவர், சில்லி காலிஃபிளவர் குழந்தைகளுக்குப் பிடித்த ஒன்று. முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. விதை, செடி எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. காலிஃபிளவர் ஒரு குளிர் பிரதேச காய்கறி. சிலர் இங்கு நன்றாக வராது, பூச்சி தாக்குதல் நிறைய இருக்கும் என்றார்கள்.

         இருந்தாலும் இந்த ஜூலையில் நாற்று விட்டு எடுத்து நட்டு விட்டேன். ஒரு அடி இடைவெளியில் மொத்தம் 12 செடிகள் நட்டேன். கோஸ் வந்ததைவிட செடி ரொம்ப செழிப்பாக வந்தது. கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஒரு தடவை கொஞ்சம் மஞ்சள் கரைசலையும், ஒரு தடவை பஞ்சகவ்யாவும் தெளித்துவிட்டேன்.
        விதைத்து இரண்டாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. சில செடிகள் ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. சில கொஞ்சம் சுருண்டு போய்விட்டது. சில செடிகளில் பூ ரொம்ப குட்டியாக வந்தது. மற்ற செடிகளில் பூ ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. வெயில் பூவின்மேல் அதிகம் விழாமல் இருக்க செடியின் இலையை மடக்கி குடைபோல ஒரு கிளிப் வைத்து மாட்டி விட்டேன். இந்த அடைமழைக்கு கொஞ்சம் முன்னதாக தப்பிக்கொண்டது. விதைத்து மூன்றாவது மாதம் (அக்டோபர்) அறுவடை செய்தாகி விட்டது. பூ ரொம்ப திரட்சியாகவும் ருசியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்தால் இன்னும் நன்றாகவே பலன்கொடுக்கும் என நினைக்கிறேன்.


  கத்தரி செடி நாற்று எடுத்து நடலாம். கத்தரி செடி கிட்டத்தட்ட ஒரு சிறிய மரம் அளவுக்கு வளரும். அதனால் ஒரு செடிக்கு மூன்று அடி இடைவெளி தேவைப்படுகிறது. ஒரு செடி மூன்று மாதம் வரை காய் கொடுக்கும். ஒரு செடியில் இருந்து மொத்தம் 5 கிலோ வரை கிடைக்கும். நிறைய இடைவெளிவிட்டு நடுவதால் சில நேரம் ஊடு பயிராக கீரையும் போடுவதுண்டு. கத்தரி செடி வளரும் போது நாம் கீரையும் பறித்துக் கொள்ளலாம்.


சமவெளியிலும் வளரும் கேரட்!


           இங்கே கோவையில் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்திருக்கிறார். அங்கே ஒரு தடவை கேரட் நிறைய விளைந்திருந்தது. கேரட் என்றாலே ஊட்டி மாதிரி மலைப்பிரதேசங்களில் மட்டும் வரும் என்று நினைத்த எனக்கு இங்கேயே அதுவும் இரண்டாவது மாடி வெயிலில் வந்திருப்பதைப் பார்த்து ரொம்ப ஆச்சரியம். பிடுங்கி சாப்பிட்டு பார்த்தபோது நன்றாக இருந்ததது


செடியைப் பற்றி விசாரித்தபோது கேரட்டுக்கும் விதைகள் கிடைக்கும் என்று தெரிந்தது. போன ஜூனில் இங்கே அக்ரி இன்டெக்ஸ் போனபோது கேரட் விதைகள் கிடைத்தது. விதைகள் சீரகம்போல இருக்கிறது. கேரட் செடியை அப்படியே விட்டு விட்டால் பூக்குமாம் (சில வருடங்கள் எடுக்கும் போல). அதில் இருந்துதான் விதை எடுக்கிறார்கள். மலைப்பிரதேச செடி என்பதால் கொஞ்சம் உயரமான படுக்கை போல ஒரு பாத்தி எடுத்துக் கொண்டேன் (செங்கலை செங்குத்தாக வைத்து அமைக்கலாம்). இதனால் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கலாம். ரொம்ப வெயிலை தவிர்க்க கொஞ்சம் வெயிலும் நிழலுமான இடம் இருப்பதும் நல்லது. லேசாக கிளறி விதைகளை தூவிவிட்டேன். ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிட்டது. 

கிழங்கு வகைகள்

               வளர்ப்பதில் ஒரு பிரச்னை, மண்ணுக்குள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா... ஏதும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்கிறதா இல்லையா... என்று சில செடிகளை அவ்வப்போது கிளறி தெரிந்துகொள்ளலாம். டிசம்பரில் அறுவடை செய்தபோது எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சல். கேரட்டும் நல்ல திரட்சியாக வந்திருந்தது. கொஞ்சம்தான் அறுவடை செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செடிகள் பறிக்காமல் நிற்கிறது. நிறைய செடிகள் ரொம்ப நெருக்கமாக போய்விட்டது. நாற்று எடுத்து சரியான இடைவெளி விட்டு நட்டிருக்கலாம். மண்ணை நிறைய மணல், இலை கழிவுகள் கொண்டு இன்னும் கொஞ்சம் தளர்வாக தயார் செய்திருக்கலாம்.

கேரட் அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கிறது. தக்காளி, வெண்டை மாதிரி வீட்டு உபயோகத்திற்கு என்று பயிரிட்டு விளைச்சல் எடுப்பது கடினம்தான். ஆனால் ஆசைக்காக ஒரு ஓரமாக கொஞ்சமாக போட்டு வைக்கலாம்..